Saturday, 26 September 2015

தகுதியற்ற ஏகலைவனின் கட்டவிரலை குரு துரோணாச்சாரியார் பறித்தது நியாயமே!

ஏகலைவனிடம் உயர்ந்த நோக்கம்  இல்லை! நல்ல பண்பும்  இல்லை!.

ஏகலைவன் ஒரு வேடன். வேடனுக்கு எதற்கு மிக உயர்ந்த வித்தை திறமை? அவன் தொழிலுக்கு மிருகங்களை வேட்டையாடத் தேவையான வில்வித்தைகள் போதுமே! அதனால்தான் ஏகலைவனிடத்தில் இருந்து கட்டை விரலை துரோணாச்சாரியார் காணிக்கையாகக் கேட்டார். தெய்வங்கிடமிருந்து தவமிருந்து வரமாக பெற்ற உயரிய அஸ்திர வித்தைகளை கேவம் ஒரு நாயிடமா காட்ட வேண்டும். நாயை விரட்ட ஒரு கல் போதுமே! அல்லது ஒரு குச்சியால் அல்லது ஒரு கம்பால் விரட்டியிருக்கலாமே அதற்கு எதற்கு இந்த தெய்வீக அஸ்திரங்களை பயன்படுத்த வேண்டும். இப்படி முறையற்ற வகையில் பயன்படுத்தும் அவனுக்கு அந்த கலைகள் அந்த வித்தைகள் தேவையா? ஏற்கனவே நான் சொல்லி தரமாட்டேன் என்று மறுத்திருந்தும் அந்த தகுதியற்றவன் கற்றுவிட்டான். அவனால் கெடுதல்தான் நேருமேயொழிய நல்லது நடக்காது எனவேதான் அந்த வித்தைகளை பயன்படுத்துவதை தடுக்க கட்டைவிரலை பெற்றார் துரொணாச்சாரியார்!