Wednesday, 5 August 2015

சென்னை மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் - வக்கீல்கள் கைது

சென்னையில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 11 வக்கீல்கள் கைது

சென்னையில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட  11 வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவிகள், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் மாணவர்களில் ஒரு பிரிவினர் திடீரென்று புகுந்து கடையை அடித்து நொறுக்கினர். இதையடுத்து, மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் ஒரு சிலர் காயம் அடைந்தனர். சென்னையில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடியில் வக்கீல்கள் கோர்ட் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மறியலுக்கு வக்கீல்  சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் வக்கீல்கள் ரகுராம், இக்னேஷியஸ், செல்வம் கிறிஸ்டோபர், ரூபராஜாரமேஷ் உள்பட 11 பேர் கலந்து கொண்டனர். அவர்களை டிஎஸ்பி தர்மலிங்கம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் வேலிக்கருவை மரங்களை அடியோடு அகற்ற திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலிக்கருவை மரங்களை அடியோடி அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது  என கலெக்டர் ரவிகுமார் தெரிவித்தார். தூத்துக்குடி கலெக்டர்  அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடந்தது. பொதுமக்களிடம் கலெக்டர்  ரவிகுமார் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்துகளில் அரசு புறம்போக்கு நிலம் குளங்கள், கண்மாய் பகுதிகளில் வளர்ந்துள்ள வேலிக்கருவை மரங்களை அடியோடி அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.  இதனை அழித்தால் ரூ.1,87,83,990 வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையைவிட கூடுதலான தொகைக்கு டெண்டர் எடுப்பவர்களுக்கு மரங்களை அகற்றும் பணி ஒப்படைக்கப்படும். முதற்கட்டமாக ஒட்டப்பிடாரம் தாலூகாவில் உள்ள தருவைகுளம், கீழ அரசரடி, ஆதனூர், மேலஅரசரடி, வேப்பலோடை, முள்ளூர், சந்திரகிரி, காட்டு உட்பட 10 பஞ்சாயத்துகளில் மரங்களை அகற்ற டெண்டர் விடப்பட உள்ளது. இதனையடுத்து படிப்படியாக அனைத்து பஞ்சாயத்து பகுதிகளிலும் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெறும்.  தாமிரபரணி ஆற்றிலும், கரையோரங்களிலும் உள்ள செடிகளை அகற்றுவதற்கு சில தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்த பணிகள் 3 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த பணிகளில் சமூக ஆர்வலார்களும் பங்கேற்கலாம். தூத்துக்குடி மாவட்டத்த்தில் தோட்டக்கலை பண்ணை அமைப்பதற்கு தோழப்பன் பண்ணை கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அங்கு கலைக் கல்லூரி தொடங்கவும் வாய்ப்புள்ளது என்றார்.


தூத்துக்குடியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனிஅறை

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனிஅறை திறப்பட்டது.பொதுமக்கள் கூடும் இடங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கென்று தனி அறை கட்டிதர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் படி பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் கட்டப்பட்டு, நேற்று தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது. இதனை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் மின்விசிறி, சுடுதண்ணீர், நவினகழிப்பிடம் ஆகிய வசதிகளுடன் மாநகராட்சி சார்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கென்று தனி அறை கட்டப்பட்டுள்ளது.  திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸ் தலைமை வகித்தார். துனை மேயர் சேவியர், மாநகராட்சி ஆணையாளர் ராக்கப்பன், சுகாதாரம் துனைஇயக்குநர் உமா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.  விழாவில், மண்டல உதவி ஆணையர்கள் ராமசந்திரன், காந்திமதி, மேற்கு மண்டல தலைவர் ஜெயபாரதி மனோகர், இளைஞரணி கவிஅரசுகவுன்சிலர்கள்  உறுப்பினர்கள் பெருமாள்தாய், சாந்தி, மெஜிலாகோல்டன், சகாயராஜ், ஆத்திக்கண், சரவணன், தவசிவேல், மனோகர், ஆனந்தகுமார், மேயர் உதவியாளர் துரைமணி, அரசு வக்கீல் சேகர் மாநகராட்சி செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment