Sunday, 9 August 2015

பெண்களுக்கான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: ரணில்

பெண்களுக்கான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: ரணில்

பெண்களுக்கு எதிரான தொந்தரவுகள் மற்றும் துன்புறுத்தல்களை விசாரிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் விசேட நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பீகார்-இமாச்சல் பிரதேச ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்களில் பலர் மாற்றப்பட்டனர். சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், உ.பி. முன்னாள் முதல்– மந்திரி கல்யாண்சிங் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கவர்னர்களாக நியமிக்கப்பட்டனர். பீகார், இமாச்சல பிரதேச மாநிலங்களின் கவர்னர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். மேற்கு வங்காள கவர்னர் கே.என். திரிபாதி பீகார் மாநில கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் இமாச்சல பிரதேச கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், பீகார் மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் மற்றும் இமாச்சல பிரதேச ஆளுநராக ஆச்சார்ய தேவ் விராத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று பிறப்பித்துள்ளார்.

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான டிராபிக் ராமசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ''கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பில் அடிப்படை கணித பிழைகள் உட்பட பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே ஜெயலலிதாவை விடுவித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்''என கோரப்பட்டு இருந்தது.  இந்நிலையில் டிராபிக் ராமசாமியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று 28-வது வழக்காக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் டிராபிக் ராமசாமி, அவரது வழக்கறிஞர் ராஜாராம் நேரில் ஆஜராகி இருந்தன‌ர். அப்போது தலைமை நீதிபதி தத்து, '' ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் முதல் முன்னுரிமை இருக்கிறது. இதையடுத்து முதல் புகார்தாரர் என்ற முறையில் சுப்பிரமணியன் சுவாமிக்கும் வழக்கு விசாரணையில் பங்கேற்றவர் என்ற முறையில் அன்பழகனுக்கும் மூன்றாம் தரப்பாக செயல்பட உரிமை இருக்கிறது. இந்த வழக்கில் உங்களுக்கு (டிராபிக் ராமசாமி) உரிமை இல்லை. எனவே உங்களது மனு தள்ளுபடி செய்யப் படுகிறது''  என்றார்.


No comments:

Post a Comment