Sunday, 9 August 2015

சண்டிவீரன் - சினிமா விமர்சனம்!தமிழ், சினிமா, நடிகர், அதர்வா, ஆனந்தி, லால், அஸ்வின், ராஜா, இசையமைப்பாளர், எஸ்.என். அருணகிரி, பி.ஜி.முத்தையா, இயக்கம் : சற்குணம்

நடிகர்கள் : அதர்வா, ஆனந்தி, லால், அஸ்வின் ராஜா மற்றும் பலர்
இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
இயக்கம் : சற்குணம்
தயாரிப்பாளர் : இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டூடியோஸ்’


நீரின்றி அமையாது உலகு’ என்பதை நிறையவே சொல்லி வருகிறது தமிழ் சினிமா. களவாணி படத்திற்கு பிறகு எப்படியாவது ஒரு கமர்ஷியல் வெற்றி கொடுத்து விட வேண்டும் என்று சற்குணம் களம் இறங்யிருக்கும் படம் தான் சண்டி வீரன். அதே போல் பரதேசி படத்திற்கு பிறகு அதர்வாவும் கதை தேர்வில் தவித்து வர, இயக்குனர் பாலாவே தன் தயாரிப்பில் சற்குணம், அதார்வாவையும் இப்படத்தின் மூலம் இணைத்திருக்கிறார்.

அதர்வாவுக்கு இது சற்று வித்தியாசமான படம்தான். கிராமத்து நாயகனாக இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். அறிமுக காட்சிக்கும் படத்திற்கு பெரிதாக சம்பந்தம் இல்லையென்றாலும் ஆரம்ப காட்சி சற்று திருப்பம்தான். காதல் மோதல் என இரண்டும் கலந்து இருந்தாலும் அடக்கி வாசித்திருக்கிறார்.

கதைப்படி, அருகருகே இருக்கும் இரண்டு கிராமங்கள் நெடுங்காடு, வயல்பாடி... ஒரு கிராமத்தில் நல்ல தண்ணீரும், இன்னொரு கிராமத்தில் உப்பு தண்ணீருமே கிடைப்பதால், நல்ல தண்ணீர் கிடைக்கும் கிராமம் வளமாகவும், உப்பு தண்ணீர் கிடைக்கும் கிராமம் பஞ்சம், பட்டினியாகவும் வாழ்கிறது. இதனால் உப்பு தண்ணீர் கிராமம், நல்ல தண்ணீருக்காக பக்கத்து கிராமத்தை நாடியிருக்க வேண்டிய சூழல். ஆனால் உப்பு தண்ணீர் கிராமத்திற்கு நல்ல தண்ணீர் தர தடுக்கின்றனர் வளமான கிராமத்து பெரிய மனிதர்கள் இருவர். அதை தட்டிக்கேட்க களமிறங்கும் ஹீரோ, பக்கத்து கிராமத்திற்கு நல்ல தண்ணீர் கிடைக்க போராடிய தனது அப்பா வழியில், சொந்த கிராமத்து பெரிய மனிதர்களை எதிர்த்து போராடுகிறார். ஹீரோவிற்கு இரண்டு பெரிய மனிதர்களையும் தாண்டி வெற்றி கிட்டியதா.? இரு பெரிய மனிதர்களில் ஒருவரது பெண் வாரிசான ஹீரோயினும், ஹீரோவின் விருப்பப்படியே கிட்டினாரா..? எனும் கதையை பசுமையான கிராமிய சூழலில், ஈரம், வீரம், வம்பு, தும்பு, பாசம், நேசம்... உள்ளிட்ட கிராமிய மனித சிறப்புகள் இம்மியும் பிசகாமல், சண்டிவீரனை வெகு நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் சற்குணம்.
படத்தில் நடித்த அனைவரின் யதார்த்தமான நடிப்பு, நல்ல கதைக்களம், படத்தின் முதல் பாதி. குறிப்பாக அதர்வா-ஆனந்தியின் காதல் காட்சிகள் அத்தனை அழகு.தண்ணீர் பிரச்னைகளுக்கும், அதைஒட்டிய தகராறுகளுக்கும், இனம், மொழி, மதம், மாநிலம் கடந்து சரியான தீர்வு சொல்ல முயன்றிருக்கும் ஒரு காரணத்திற்காகவே சண்டிவீரனை பாராட்டலாம். .முதல் பாதியில் நன்றாகவே மிரட்டியுள்ளார்.

ஆனந்தி… அப்படியே தஞ்சைப் பொண்ணாக மின்னுகிறார். பெரிதாக ஒப்பனை இல்லை. நடிப்பில் அடக்கி வாசித்தாலும் அத்தனை அழகு. குறும்பான பொண்ணாக, துடிக்குத்தனத்திலும் துள்ளல் நடிப்பில் நெஞ்சை அள்ளுகிறார் ஆனந்தி. ஆனந்தியின் அம்மாவாக வருபவரும் அத்தனை லட்சணம்.

அதர்வாவின் பெற்றோராக போஸ் பாண்டி, ராஜஸ்ரீ. இருவரும் கச்சிதம். மற்றும் ஊர் தலைவர்கள், ஊர் மக்கள், நண்பர்கள் என அனைவரும் சரியாத தேர்வுதான்.  மணி அமுதன் எழுதிய ”அலுங்குற.. குலுங்குற…” பாடல் தாளம் போடவைக்கும். ஒரு பாடலின் வரியை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். நிலவில் தண்ணீர் இருக்கா என ராக்கெட் விட்டு தேடுகிறோம். ஆனால் நிலத்தில் தண்ணீர் வியாபாரம் ஆகிவிட்டது என்ற வரிகள் கண்ணீரை வரவழைக்கும். சபேஷ் முரளியின் பின்னணி இசை படத்திற்கு நன்றாக கை கொடுத்துள்ளது. பி.ஜி. முத்தையா கிராமத்து அழகை விருந்தாக படைத்திருக்கிறார். பெரும்பாலம் கிராமம், குடிநீர் பிரச்சினை என்றால் வன்முறைதான் இருக்கும். ஆனால் வன்முறை, ஆபாசம் எதுவும் இல்லாமல் தந்திருக்கிறார் இயக்குனர்.

கர்நாடகா காரன் தண்ணி கொடுக்கலேன்னு சண்டை போடுறோம். ஆனால் பக்கத்து ஊருக்கு தண்ணி தர மாட்டேங்குறோம்...’ என்கிற வசனம் நெற்றி பொட்டில் அறைகிற ரகம். பரபர பைட் இருக்கிறது. அதற்கு இணையாக இருக்கிறது அந்த கரெண்ட் கம்பி காட்சிகள். இன்னும் சற்று நேரத்தில் பக்கத்து ஊர் காலியாக போகிறது. வெடிகுண்டு வீச்சரிவாள்களுடன் கிளம்பு கிறவர்களை தடுக்க வேண்டும். என்ன செய்யப் போகிறார் அதர்வா? டெம்ப்ட் ஏற்றி திருப்புமுனை ஏற்படுத்துகிற திரைக்கதை. எல்லாம் சரியாக கொடுத்தும் படத்தின் க்ளைமாக்ஸை தேவையில்லாமல் நகைச்சுவையாக முடித்திருப்பது படத்திற்கு கொஞ்சமும் பொருந்தவில்லை.


Tags:
சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ‘சண்டி வீரன்சினிமா விமர்சனம், ‘சண்டி வீரன்திரை விமர்சனம், ‘சண்டி வீரன்ரேட்டிங், ‘சண்டி வீரன்விமர்சனம் . தமிழ், சினிமா, நடிகர், அதர்வா, ஆனந்தி, லால், அஸ்வின், ராஜா, இசையமைப்பாளர், எஸ்.என். அருணகிரி, பி.ஜி.முத்தையா, இயக்கம் : சற்குணம்

No comments:

Post a Comment