செவ்வாய் தோஷம் :
திருமணத்தை பொறுத்தவரை அதிக முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது .
லக்கினமே ஒருவருக்கு அனைத்துமாக இருப்பதால் இந்த தோஷத்திற்கு முக்கியமான லக்னம் இருக்கபடுகிறது .லக்னம் எல்லா பாவங்களையும் கட்டுபடுத்தும் திறன் கொண்டது .
மனதிற்கும் ,உணர்ச்சிகளுக்கும் சந்திரன்
காரகமாவதால் ,சந்திரனிலிருந்தும் செவ்வாய் தோஷம் காணப்படுகிறது
காரகமாவதால் ,சந்திரனிலிருந்தும் செவ்வாய் தோஷம் காணப்படுகிறது
திருமணம்,வாழ்க்கைத் துணை மற்றும் பாலியல் மகிழ்ச்சிக்கும் சந்திரன் காரகமாவதால் செவ்வாய் தோஷத்திற்கு சுக்கிரனும் முக்கியமாகக் கருதப்படுகிறது .
முதலாவது வீடு (லக்னம்) பொதுவாக தன்னைப்பற்றியது ,ஆனதால் இந்த இடத்தில் செவ்வாய் இருப்பது உடலளவில் கஷ்டங்களையும் , பாதிப்புகளையும் காரணமாகிறது .
இரண்டாம் வீடு தனம் மற்றும் குடும்பத்தைக் குறிகாட்டுவதால் இங்கு செவ்வாய் குடும்ப விஷயங்களிலும் , பொருளாதார விஷயங்களிலும் ,கஷ்டங்களைக் கொடுக்க ஏதுவாகிறது .
நான்காம் வீடு - குடும்ப சந்தோஷம் மற்றும் வாழ்க்கை வசதிகளை குறிகாட்டுவதால் செவ்வாயால் இங்கு ஏற்படும் பாத்திப்பு ஜாதகருக்கு மிகுந்த பிரச்சனைகளை தரவல்லது .
7 ம் வீடு ஒருவரின் வாழ்க்கைத் துணை ,திருமணம் , மணவாழ்வு ,ஆகியவற்றிக்கு முக்கிய இடம் ஆதலால் செவ்வாயால் இந்த வீட்டிற்கு ஏற்படும் பாதிப்பு இந்த காரணங்களில் இன்னல்கள் ஏற்படுத்தக் காரணமாகிறது .
8 ம் வீடு ஆயுளையும் ,மங்கல்யத்தையும் ,குறிகாட்டுவதால் இந்த வீட்டில் செவ்வாய் இடம் பெறும்போது இக்காரணங்களுக்குண்டான பாதிப்பு கஷ்டங்களைக் தருகிறது .
12 ம் வீடு பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதால் இந்த வீட்டிற்கு செவ்வாயால் ஏற்படும் பாதிப்பு இந்த காரணங்களால் ஜாதகருக்குக் கஷ்டங்கள் ஏற்படக்காரணமாகிறது.
லக்கனத்தில் செவ்வாய் இருக்க ஏற்படும் செவ்வாய் தோஷம் அதிகமான பாதிப்புகளைத் தராது என நம்பப்படுகிறது .இந்த பாதிப்பானது சந்திரனிலிருந்து பார்க்கப்படும் போது பலம் மிக்கதாகுவும் ,சுக்கிரனிலிருந்து பார்க்கப்படும் போது பலம் மிக்கதாகுவும் கருதப்படுகிறது . 1,2,4,12 வது வீடுகளில் செவ்வாய் இருக்கும் போது ஏற்படும் தோஷம் குறைவான தோஷம் ஆகும் .ஆகவே 7,8 வது வீடுகளில் இருக்கும் போது ,மிகப்பெரிய அளவிலான தோஷத்தை அளிக்கிறது.செவ்வாய் தோஷம் என்பது நாம் அசட்டையாக ஒதுக்கிவிடகூடியது ஒன்றில்ல .அது சர்வ நிச்சயமாக ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு காரணமாகின்றது .
லக்கனத்தில் செவ்வாய் நின்றால் ,திருடர் பயம் , உடலில் காயங்கள் ஏற்படுதல் ,பெற்றோரிடம் பாசமின்மை ,கண் நோய்,தலையில் நோய்,நெருப்பில் கண்டம் ,சக்திமிகு உடலில் வியாதி ,விரைவில் நிவாரணம் ,சிக்கலை எதிர்கொள்ளுதல் ,சவால்களில் வெற்றி பெறுதல் ,மூட சிந்தனை ,சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துகொள்ளுதல்,சுய நலம் ,தற்புகழ்ச்சி .
2 ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் - தாராளமனம் ,ஊதாரி ,அதிக செலவு செய்தல் ,கபடமற்ற வெளிப்படையான மனம் ,பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக கிட்டுதல்
4 ம் இடத்தில் செவ்வாய் நின்றால் மார்பு வலி ,இதய நோய் ,வாகன விபத்து ,கல்வியில் மந்தம் ,தாயார் ,உறவினர் சந்தோஷமின்மை ,அரசியல் வெற்றி ,தாயாருடன் தகராறு ,சொந்த வீடு ஆனாலும் மகிழ்ச்சியின்மை .
7 ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் குறுக்கு புத்தியுள்ளவர் .திருமண வாழ்வில் சண்டை சச்சரவு ,கோபம் ,சூதாட்ட ஆர்வம் ,புத்திகூர்மை ,தைரியம் ,வாழ்க்கையில் போராட்டம் அதிகமாகும் .
8 ல் செவ்வாய் இருந்தால் - ஆயுள் குறைபாடு ,குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள் ,உறவினர்களிடம் வெறுப்பு ,இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ,மூல நோய்,கூட்டத்திற்கு தலைமை ,வழக்குகளில் வெற்றி ,உயில் மூலம் சொத்து கிடைக்கும் .
12 ல் செவ்வாய் இருந்தால் - மனைவி இழப்பு ,சுய நலம் ,உஷ்ண நோய் , வெறுப்புணர்ச்சி ,பணக்கஷ்டம் ,கொடூர குணம் ,வீண் விரையம் ,அறுவை சிகிச்சை ,இளமையில் திருமணம்,விவாகரத்து முதலியன .
'இவ்வாறெல்லாம் செவ்வாய் தோஷம் உள்ளதே - நம் ஜாதகத்தில் ' என பயந்து ,மன வேதனைப்பட்டு முடங்கிவிட வேண்டாம் .இந்த விதிகளுக்கும் ,தோஷங்களுக்கும் நிறையவே விதி விளக்குகளுக்கும் உள்ளன .
No comments:
Post a Comment