Thursday, 17 September 2015

குரு மந்திரங்கள்! குரு ஸ்தோத்திரம்! குரு காயத்ரி மந்திரம்!

குரு மந்திரங்கள்

குரு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குரு தசை அல்லது குரு அந்தர் தசையின் போது குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.

குரு மூல மந்திர ஜபம்:

"ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ",

40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.

குரு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

தேவானாம் ச ரிஷஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!

    தமிழில்,

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!


வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.

நோன்பு நாள்: வியாழன்.
 பூஜை: ருத்ர அபிஷேகம்.

ருத்ராட்சம்: 5 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

குரு காயத்ரி மந்திரம்

வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்


குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

No comments:

Post a Comment