Tuesday 22 September 2015

குரு தரும் சகட யோகம்! குரு தரும் கஜகேசரி யோகம்! குரு தரும் கம்ச யோகம்! குரு தரும் குரு மங்கள யோகம்!

குரு தரும் சகட யோகம்

சந்திரனுக்கு 6 அல்லது 8 அல்லது 12ல் குரு இருந்தால் அது சகட யோகம் ஆகும் இந்த யோகநிலை பெற்றவர்களுக்கு வாழ்க்கையானது மேலும் கீலுமாக ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். வாழ்க்கை வண்டிச் சக்கரம்போல ஏறி இறங்கிச் செல்லும் தன்மையுள்ளது.

குரு தரும் கஜகேசரி யோகம்:

குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் 'கஜகேசரி யோகம்' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம். செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர்களாக விளங்குவர்.

குரு தரும் குரு - சந்திர  யோகம்
குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர  யோகம் உண்டாகிறது. இதன் மூலம் உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.
 
குரு தரும் ஹம்ச யோகம்
குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரமாகிய 4,7,10ல் ஆட்சி, உச்சம் பெற்று காணப்பட்டால் ஹம்ச யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் நல்ல உடலமைப்பு மற்றவர்களால் மதிக்கப்படும் உன்னத நிலை ஒழுங்கான வாழ்வு போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகிறது.
 
குரு மங்கள யோகம்
குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. இதனால் பூமி, மனை சேர்க்கை அதிகரிக்கும்.
 

No comments:

Post a Comment