தசா என்றால் உடலின் தசையையும், புக்தி என்றால் மனம் மற்றும் புத்தியையும், அந்தரம் என்றால் அந்த கணத்தில் உங்கள் நிலையையும் வெளிப்படுத்தும் அம்சங்களாகும். இப்போது ஒருவருக்கு குருதசை நடந்தால் அவர் உடலை குருவும், அதிலும் சந்திர புக்தி இருக்குமானால், மனதை சந்திரனும், அதற்குள்ளாக சுக்கிரன் அந்தரம் என்றால், அப்போதைக்கு சுக்கிரனும் கைகோத்துக் கொள்ள, அவர் வாழ்க்கையை நடத்துகிறார் என்று அர்த்தம்.
புனர்பூசம் விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் குருதசையே நடைபெறும். இவரே அந்த உயிரின் அடிப்படை தன்மைகளை தீர்மானிப்பவராக இருப்பார். இது போல வௌ;வேறு நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு அந்தந்த நட்சத்திர அதிபதியின் தசைதான் முதலில் வரும். இந்த குரு தசையை அடுத்து சனி தசை, புதன் தசை, கேது தசை, சுக்கிர தசை என்று தொடரும். அதே சமயம் எந்த தசையானாலும் அதையும் ஒன்பதாக பிரித்து கிரகங்கள் ஆளும். குரு தசைக்குள் குரு புக்தி, குரு புக்திக்குள் இன்னும் ஆழமாகப் போய் அந்தரம் வரை குருவின் ஆட்சி நடக்கும். சனி தசைக்குள் குரு புக்தி அதற்குள் குரு அந்தரம் என்பது வரை தொடரும்.
குரு தசை, குரு புத்தி, குரு அந்தரம் என்றால் என்ன?
No comments:
Post a Comment