Thursday 10 September 2015

குரு பகவானின் பெருமைகளும் அதன் முக்கியத்துவமும்

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான்.

குரு தேவர்களுக்கு எல்லாம் தலைவராவார்.

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று.. காசு, பணம் எனப்படும் பொருட்செல்வம். இன்னொன்று.. குழந்தைச் செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும்.

குரு இருக்கும் இடம் பாழ்.பார்க்கும் இடம் விருத்தி’ என்பார்கள்.

 அதன்படி, இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும்.

குருவின் ஆதிக்கம்

ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி ஆகியவை குருவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.சமூக அந்தஸ்து, அரசியல் பதவி, ஆன்மிக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், தர்ம ஸ்தாபனங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரி கட்டுதல், அறங்காவலர் பதவி, நீதிபதி, கவர்னர் போன்ற அரசு உயர் பதவியில் அமர்வதற்கு குருபகவானின் அருள்கடாட்சம் தேவை.

குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். நல்ல இடத்தில் திருமணம் முடியவேண்டுமெனில் இவருடைய ஆசி தேவை. குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நிச்சயமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும். பதப்படுத்துதல், பக்குவமாக்குதல், பலப்படுத்துதல் என்று மூன்று விஷயங்களை குருவின் பார்வை செய்கிறது. குழந்தைக்கும் முதல் முடி எடுத்து மொட்டை போடுவதற்கு குல தெய்வத்துக்கு செல்கிறோம். ஒருவகையில் பார்த்தால் குல தெய்வம் தான் ஒருவருடைய குரு! குல தெய்வத்திற்கு செய் என்று உணர்த்துபவர் தான் குரு. குல தெய்வமே தெரியவில்லையா, குருவின் முழு அம்சமான திருச்செந்தூர் முருகனையே குல தெய்வமாகக் கொள்ளலாம். ஸ்ரீகுரு பகவான் முறையற்ற உறவுகளை தடுப்பவர், சம்பிரதாயப்படி திருமணத்தையும் நடத்தி வைப்பவர்

No comments:

Post a Comment