வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பிரகார ஸ்தலமாக உள்ளது
ஆலங்குடி, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்.
குருபகவான் திருத்தலத்தின் சிறப்பம்சங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வடக்கே 7 கி.மீ., தொலைவிலும், கும்பகோணம் மன்னார்குடி (நீடாமங்கலம் வழி) பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ., தொலைவிலும் மிகவும் பிரசித்தி பெற்றுருக்கும் குரு பரிகார ஸ்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.
ஆலங்குடி வரலாறு - குரு பகவான் தல வரலாறு:
பாற்க்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அத்துடன் இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது.
சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபட மக்கள் தொலைவிலும் அருகிலும் இருந்து கூட்டமாக வருகின்றனர். எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற விக்ரஹத்திற்கு மங்கள அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும். ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.
தல மூர்த்திகள்:
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்.
அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, உமையம்மை.
அருள்மிகு குரு தட்சிணாமூர்த்தி
அருள்மிகு கலங்காமற் காத்த விநாயகர்.
ஆலங்குடி கோயில் மகிமைகள் : ஆதிசங்கரர் குரு மூர்த்தியை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன் முதலிய அஸ்டதிக்கு பாலகர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்க பேறு பெற்றார்கள்
குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவான் அருள் பெறுவர். வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.
ஆலங்குடி பக்கத்தில் இருக்கும் பாரக்க வேண்டிய இடங்கள்
குரு பகவானுக்கான நவக்ரஹ ஸ்தலமான ஆலங்குடிக்கு பக்கத்தில்
ஏனைய எட்டு நவக்கிரக ஸ்தலங்களான திருநள்ளாறு (சனி பகவான்), கஞ்சனூர் (சுக்கிரன்), சூரியனார் கோயில் (சூரியன்), திருவெண்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (ராகு), திங்களூர் (சந்திரன்), கீழ்பெரும்பள்ளம் (கேது) ஆகியவை அமைந்துள்ளன.
குரு பகவானுக்கு உகந்தவை:
ராசி : தனுசு, மீனம்
அதி தேவதை : வியாழன்
நிறம் : மஞ்சள்
தானியம் : கடலை
உலோகம் : தங்கம்
மலர் : முல்லை
ரத்தினம் : புஷ்பராகம்
ஸ்தல விருட்சம் : பூலைச்செடி
காயத்ரி மந்திரம்:
விவ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்.
நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசான். இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி. நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார். சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம். பிரம்மாவின் பேரர் ஆங்கீரச மகரிஷி. அவருடை மகனாகப் பிறந்தவர் ‘குரு’ என்று போற்றப்படும் வியாழபகவான்.
குரு சூரியனைச் சுற்றிவர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் குரு பரிகாரத்தலங்கள் பல உள்ளன. இவற்றில் கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். தஞ்சாவூர் மாவட்டம் திட்டை, மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் உள்ளிட்ட ஆலயங்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம்.
திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். குரு, சுக்ரன் இரண்டும் ராஜ கிரகங்கள் என்பர். 4வேதங்கள்,64கலைகள் அறிந்தவர்கள்.

No comments:
Post a Comment