ராஜயோகங்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையாலும், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தின் சம்மந்தம் பெறுவதாலும், ஒரு கிரகம் குறிப்பிட்ட ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் இருந்தாலும் ஏற்படக்கூடிய விளைவுகள் யோகம் எனப்படும்.
இந்த யோகம், சுபயோகம், அவயோகம் என்று இரண்டு வகைப் படும். பெரும்பாலான ஜாதகங்களில் சுபயோகங்கள் (ராஜ யோகங்கள்) இருந்தும் அந்த ஜாதகர் வாழ்க்கையில் அடி மட்ட நிலையில் இருப்பார்.
இதற்கென்ன காரணம்? என்றால் அந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள் பங்கமடைந்துள்ள நிலையே.
ஒரு ஜாதகத்தில் உள்ள யோகங்கள் நடைமுறையில் பலன் தருமா? தராதா? என்பதையும், தரும் என்றால் எப்பொழுது? என்று எப்படி தெரிந்துகொள்வது?
முதலில் ஒரு ஜாதகத்தில் உள்ள யோகங்கள் நடைமுறையில் பலன் தருமா? தராதா? என்பது தெரிந்தால்தானே எப்பொழுது நடக்கும் என்ற கேள்வி கேட்கமுடியும்.
யோகங்கள் நடைமுறையில் பலன் தருமா? தராதா?
இதற்கு முதலில் யோக பங்க நிலைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
யோகபங்க நிலைகள்.
1. யோகம் தரும் கிரகங்கள் பகை, நீச்சம் பெற்றால் யோக பங்கம்.
2. ராசிக்கட்டத்தின்படி யோகம் தரும் கிரகங்கள் பாவகச் சக்கரத்தின்படி பாவக மாற்றம் அடைந்திருந்தால் யோக பங்கம்.
3. யோகம் தரும் கிரகம் ராசிக் கட்டத்தில் நிஷ்பலம் பெற்றிருந்தால் யோக பங்கம்.
4. யோகம் தரும் கிரகங்கள் கிரகண தோஷம் அடைந்தோ, அஸ்தமனம் அடைந்தோ இருந்தால் யோக பங்கம்.
5. யோகம் தரும் கிரகங்கள் கிரக யுத்தத்தில் இருந்தால் யோக பங்கம்.
6. லக்கினம், லக்கினாதிபதி, 5 –மிடம் 9 –மிடம் பழுதடைந்து பலவீனமாக இருந்தால் யோக பங்கம்.
7. யோகம் தரும் கிரகங்கள் பாப கர்தாரி யோகத்தில் இருந்தாலும் யோக பங்கமே.
8. யோகம் தரும் கிரகங்கள் ஆதிபத்தியத்தின்படி சுபரா? பாவியா?
9. யோகம் தரும் கிரகங்களுக்கு, பகை கிரகங்களின் சேர்க்கை யோகத்தை பங்கப்படுத்தும்.
10. யோகம் தரும் கிரகங்கள் 6, 8, 12 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தால் யோக பங்கம்.
11. (முக்கியமான விதி) யோகம் தரும் கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி பாவகப்படி 6, 8, 12-ல் மறையக்கூடாது.

முக்கியமான சில விதிகளைமட்டும் தந்திருக்கிறேன். மேலும் சில விதிகளை அவ்வப்போது தருகிறேன்.
மேற்படி 11 விதிகளைப் பற்றிய விளக்கங்களை தேவையான இடத்தில் தருகிறேன்.
3600 யோகங்கள் இருப்பதாக பழைய மூல நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் நாம் பார்க்கப்போவது சுமார் 400 யோகங்கள் மட்டுமே.
முதலாவதாக பஞ்ச மஹா புருஷ யோகம். இந்த யோகம் பஞ்ச மஹாபுருஷர்களால் ஏற்படக்கூடியது. நவகிரகங்களில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இவ்வைந்து கிரகங்களுக்கும் பஞ்ச மஹாபுருஷர்கள் என்று பொதுவாக ஒரு பெயர் உண்டு.
இந்த யோகத்தை,
1) செவ்வாயால் ஏற்படக்கூடிய ருச்சக யோகம்.
2) புதனால் ஏற்படக்கூடிய பத்திரை யோகம்.
3) குருவால் ஏற்படக்கூடிய ஹம்ச யோகம்
4) சுக்கிரனால் ஏற்படக்கூடிய மாளவியா யோகம்
5) சனியால் ஏற்படக்கூடிய சச யோகம்
என்று 5 வகையாக பிரிக்கலாம்
http://www.tamilhoroscope.in

No comments:
Post a Comment